வெள்ளி, 18 ஜூன், 2021

என்னவளின் பிறந்தநாள்

என்னவளின் பிறந்த நாள், கடந்த அக்டோபர் மாதம் காந்தி பிறந்த மறுநாள்.. இந்தியாவில் இருந்த போது உன்னிடம் சொன்ன வார்த்தைகள் இவை "அம்மு உன் பிறந்த நாளுக்கு , என்னுடைய வாழ்த்துக்கள் தான் முதலாக இருக்கும்" நீ சிரித்துவிட்டு, நீங்க தான் அமெரிக்காவில் இருப்பீங்களே , எப்படி என்றாய்? பாரேன் என்று சொன்ன போது நம்பவில்லை.. நான் உன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்ன போது..நீ நம்பாதது..பிறகு உண்மை என்று தெரிந்த பின் கோபத்தோடு என்னை திட்டியது...அதன் பின்னே.சந்தோஷப்பட்டது..என்னவென்று சொல்வது.. இதோ Air India விமானத்தில்... சொல்ல மறந்து விட்டேனே.. எனக்கு விமான பயணம் என்றால் பயம்... இப்போது உன்னை காணப் போகிறேன் என்ற ஆவல்.. இதோ விமான கேப்டனின் அறிவிப்பு..இன்னும் சிறிது நேரத்தில் ஆகாய மார்க்கம் பறக்க போகிறேன்.. நடந்தவைகளை நினைத்து பார்க்கிறேன்..இங்கிருந்து புறப்டுவதற்கு முன் உன்னிடம் " ""நான் இந்தியாவில் இருக்கும் ஒரு வாரமும் நீ என்னோடுதான் இருக்க வேண்டும் என்றேன்...நீயும் நாணத்துடன் சம்மதித்தாய்" பிறகு ஒரு நாள் அதிகாலையில் குழந்தையாய் அழுதாய்.. உன் தாத்தா இயற்கை ஏய்திவிட்டாரென்று.. நீ உன் பிறந்தகம் சென்றாய், உன்னை தோளில் தூக்கி வளர்த்த உன் பாட்டனாரின் கடைசி பயணத்திற்கு விடை சொல்ல.. இத்தனை மைல்களுக்கப்பால் நான் உனக்காக துயரபட்டதை எப்படி நீ அறிவாய்.... நீ சாப்பிட்டாயா.. உறங்கினாயா , உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்.. சுவாசம் அடைத்தது, குழந்தையின் அழுகுரல்... முதியோர்களின் புலம்பல்கள்.. வட இந்திய பெரியவரின் சண்டை.. இத்தனயும் என்னை சுற்றித்தான் நடக்கின்றதா..அதிர்ந்தேன்!! மறுபடியும் விமான கேப்டன் அறிவிப்பு.... ஏதோ கோளாறாம்.அதுவும் விமான ஓடுதளத்தில் சென்ற பின் இழுத்து வந்துவிட்டார்கள்....ஐந்து மணி நேரம் நிறுத்தி வைக்க பட்ட விமானத்தின் உள்ளயே..கிடந்தேன்.... பின்பு அறிவித்தார்கள்...நாளை மாலைதான் விமானமாம். பிறகு நடந்தவை எப்படி சொல்லுவேன் ... விடுதிக்கு செல்லும் பேரூந்து ஏற..மூன்று மணி நேரம் வரிசையில் நின்றேன் . அக்டோபர் மாத newark குளிர் என்னை விட்டு வைக்க வில்லை...இரண்டு மணி நேரம் வீதியில் காத்திருந்தேன், அசதியில் தூங்கியபின் ஹோட்டல் வந்து சேர்ந்தேன்.. அங்கேயும் எனக்கு முன்பே என் விதி நின்றுகொண்டு சிரித்தது.. எல்லா அறைகளும் நிரம்பி விட்டனவாம். ஹாலிலே உறங்கினேன்.. ஒரு வழியாக காலை பத்து மணிக்கு, என்னை போல bachelor நால்வருக்கும் சேர்த்து ஒரு அறை ஒதுக்கினார்கள்..ஒதுங்கினேன்.. "என்னை மறந்து ஒரு மணி நேரம் உறக்கம்..உறக்கத்திலும் உன்னை நினைத்திருப்பேன்..தெரியவில்லை". இதோ ஒரு வழியாக மறுபடியும் ஐந்து மணி நேர தாமதத்திற்கு பின்பு இருபது மணி நேர விமான பயணம். ஒருவழியாக சென்னை வந்தடைந்தாகி விட்டது... இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும் உன்னை காண.... உன்னை பார்க்க..விரட்டிக் கொண்டு வந்தேன் என் Hero Hondavai.... "இதோ.. அந்த நேரம். என் கிராமத்து அழகி... அழகாக ! இந்த உலகத்தில் பிறந்த , பிறக்க போகும் கவிஞர்கள் பார்க்காத , பாடாத கவிதையாய் நீ." பக்கம் வந்தேன்...உன் பாட்டனாரை பிரிந்த சோகத்தில் நீ.. என்ன சொல்லி ஆற்றுவது.. யோசித்த வைத்த வார்த்தைகள் வர வில்லை... " பார்த்தவுடன் உன்னை ஒரு குழந்தையாய் அணைப்பேன் என்றிருந்தேன் .. அதுவும் மறந்தேன்.." என்னை பார்த்தவுடன் .. " உன் கண்களில் கண்ணீரோடு சிரித்தாய்" "அழகுதான், காலைப் பூக்களில் பனித் துளிகள் இருப்பது..."!!!!! பின்பு கேட்டேன்... "எப்படி அம்மு இருக்கீங்க" "நான் நல்ல இருக்கேன் பா" என்றாய் , இந்த ஒரு வார்த்தை போதுமடி பெண்ணே.. எத்தனை முறையேனும்.. வீதியில் தங்கி, குளிரில் நடுங்கி.. பல மணி நேரப் பயணம் செய்தும் உன்னை பார்க்க வருவேன் என்ற நினைப்பில் , உனக்காகவே பல கடைகள் தேடி, உனக்குப் பிடித்த நீல நிறத்தில் நான் வாங்கிய "ஆப்பிள் ஐபாடை" கொடுக்க மறந்தேன்...

புதன், 18 நவம்பர், 2009

உன் நினைவுகள்

தினமும் என்னை உறங்கவிடாமல்,
சிசு தரித்த கண்ணித்தாயின்
சந்தோஷ வலிகளாய்
உன் நினைவுகள்!

எத்தனை விடியல்கள்

நீ இல்லாத இந்நாட்களில்
என் இரவில் மட்டும்தான்
எத்தனை விடியல்கள்!

புதன், 9 செப்டம்பர், 2009

உன்னிடம்

உன் முன்னே
நிற்கும் போது மட்டும்..
அர்ஜுனன் முன் நின்ற
பீஷ்மராகிரேன் !
ஒவ்வொரு நாளும்
உன்னை ஜெயிக்க நினைத்து ,
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன் !

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

மார்கெட்டிங்

எல்லாருக்கும் மார்க்கெட்டிங் அனுபவம் இருந்திருக்கும், இங்கே அப்படி என் நண்பர் ஒருவர் மாட்டிக்கொண்ட சம்பவம் கீழே.. நம்ம நண்பர் வீட்டுக்கு பிரபலமான அந்த நிறுவனத்தோட பொருட்களோட ஒருத்தர் வந்து இருக்கார். பின்னே நடந்தவை...

சார் , உங்க வீட்டுல என்ன பேஸ்ட் use பண்றீங்க ,
நண்பர், colgate paste,,,
அதை கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்..
(நம்ம நண்பரும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கார், கொஞ்சம் எடுத்து தன்னோட கையில் தேய்த்தவர்)
"பாருங்க", உங்க paste use பண்ணி தேய்க்கும் போது "க்ரீச்சு,க்ரீச்சுன்னு" ,"சத்தம் வருது...
chemicals use பண்ணி தயாரிக்க பட்டது சார்", உங்க பல்லு சீக்கிரம் தேய்ந்ஜிடும்ன்னு சொல்லி இருக்கார்,
உடனே அவர் கொண்டுவந்த paste எடுத்து தேய்த்து காட்டி,
"பாருங்க எங்க கம்பெனி பேஸ்ட் எவ்வளவு மென்மையா இருக்குன்னு சொல்லி இருக்கார்...."
அப்பவே நம்ம ஆளு காண்ட ஆயிட்டார்...
உடனே," நாங்க இந்த பேஸ்ட் ரொம்ப நாளா உபயோகிக்கிறோம் நல்ல தான் இருக்குன்னு " சொல்லி இருக்கார்.
உடனே விற்க வந்தவர், "சரி சார், அத விடுங்க..என்ன சாம்பு use பண்றீங்கன்னு கேட்டு இருக்கார்..."
நம்ம ஆளு கடுப்புல, "எல்லாம் க்ளினிக் *****ear தான்னு சொல்லி இருக்கார்..."
இவரு உடனே ...."அதை கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்.."
நம்ம ஆளு மனசுக்குள் "மவனே இருடி உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லனு" திட்டிகிட்டே...கொண்டு வந்து கொடுத்திருக்கார்,
கொஞ்சம் எடுத்து தன்னோட கையில் வைத்து..பின்னர் தண்ணி ஊத்தி கழுவி இருக்கார்..
அதன் பின்னே..தன கையில் torch light அடித்து காட்டி இருக்கார்....
"பாருங்க...blue color தெரியுது" அவ்வளவும் chemicals சார், சீக்கிரம் முடி எல்லாம் கொட்டி போய்டும்".எங்க சாம்பு ரொம்ப மென்மையானது , ஒன்னு வாங்கிகோங்க.இது வெறும் 199 மட்டுமே..ன்னு சொல்லி இருக்கார்..
உடனே..நம்ம ஆளு " நாங்க ஏண்டா தலை குளிச்ச பிறகு..தலையில torch light அடிக்க போறோம்னு கேட்டு இருக்கார்....
(அதுக்கு அப்புறம் ஏன் சாம்பு விற்க வந்தவர் அங்க உக்காந்து இருக்க போறார் விடு ஜூட்)

வியாழன், 30 ஜூலை, 2009

இமையசைவில்

அடியே
உன் இமையசைவில்
புறப்படும் புயல் காற்று,
என் இதய மலர்களை
பிய்த்து எரிவதேன்!

செவ்வாய், 21 ஜூலை, 2009

இதயத்தின் இசை

இதுவரை

வெறும் ஓசையாகவே இருந்த

என் இதய துடிப்பு ,

நீ வந்த பின் -- என்னை

மயக்கும் இசையாகவே இசைக்கிறது..