செவ்வாய், 30 ஜூன், 2009

என்ன தலைப்பு சூட்ட

உன்னை

பிரிந்து இருக்கும்

இந்நாட்களில் ஏனோ வார்த்தைகள்.....

அடி ஓவியா

உன் ஓவியம் கேட்டதற்கு ,
நீ
வரைந்த ஓவியங்கள் தந்தாய்!
அடி ஓவியமே...
சொன்னால் நம்புவாயா
நீ
வரைந்த ஓவியங்களில்
உன்னை மட்டுமே பார்க்க முடிகிறது !


இமைகள் எழுதும் கவிதை

உன்
இருஇமைகள் எழுதும்
கவிதைக்கு முன்னால்
நான்
எழுதும் யாவும்
எம்மாத்திரம்!

ஆசைதான்

உன் இதயத்துள் சென்று,
உன்னுள் நிறைந்தவன்
நானா என்று கண்டறிய,
ஒருமுறையேனும்
உன் சுவாசக்காற்றாய் மாற
ஆசைதான்..
நடக்குமா அன்பே..

வியாழன், 25 ஜூன், 2009

வேறுபாடு

உன்னை பார்த்த போது -
நீ இவளை மணந்தால்
வாழ்க்கை இனிமை என்றது அறிவு!
இல்லையில்லை இவள்தான்
உன் வாழ்க்கை என்றது மனது !
புரிந்ததா வேறுபாடு!

கோபப்படும் தருணங்களில்

தருணங்களில்
கண்கள் அகல விரித்து,
ஆட்காட்டி விரல் உயர்த்தி,
உதடுகள் சுழித்து, மிரட்டும்
அழகிற்காக - எத்தனை தடவையேனும்
உன்னை கோபப்படுத்துவேன்!
மண்ணிப்பாயாடி பெண்ணே!

செவ்வாய், 23 ஜூன், 2009

அழகென்பேன்

நீ பேசும் அழகை விட
பேசும்போது அபிநயம் பிடிக்கும்
உன் கண்கள்தான் அழகென்பேன்!

திங்கள், 22 ஜூன், 2009

காத்திருக்கும் நேரங்களில்

உனக்காக காத்திருக்கும்
நேரங்களில் - நான் மட்டுமல்ல
என் கடிகார முட்களும்
ஆனந்தம் அடையுதடி!
தூரத்தில்
நீ பாதம் தொட்டு
நடந்து வரும் ஒவ்வொரு அடிக்கும்
என் இதயம்
ஈரம் பட்டு போகுதுடி!

வியாழன், 18 ஜூன், 2009

உன் இதயம் என்னிடத்தில்

என் இதய துடிப்பு மட்டும்
இரு மடங்காக இருக்கிறதாம்!
சொன்னால் பைத்தியம் என்பார்கள்,
உன் இதயமும் சேர்ந்து துடிப்பது
என்னிடதில்தானே!

விழிகள் எனும் ஆயுதம் தாங்கி

சத்தமில்லாமல்
அணு ஆயுத சோதனை நடத்தும்
உன் இருவிழிகளை - என்னதான்
சொல்லி தடுப்பது!
இப்போதாவது என் இதயம்
சீராக துடிக்க,
உன் கருவிழிகளை கொஞ்சமேனும்
உருட்டாமல்த்தான் இரேன்!

காத்திருப்பேன்

உன் பிஞ்சு விரல்கள் - என்
தலை கேசம் தொட்டு
விளையாடும் அந்த கணத்திற்காக
எத்தனை காலமேனும்
காத்திருப்பேன்

அழகாய் தானடி இருக்கும்

நான் எழுதும் யாவும்
அழகாயிருக்கிறது என்கிறாய்..
அடி அழகியே - உன்னை நினைத்து
உன்னையே
எழுதினால் யாவும் அழகாய் தானடி
இருக்கும்!

புதன், 17 ஜூன், 2009

பேனா முள்ளின் சிநேகம்

ஒரு வரி எழுதவே தடுமாறும்
என் பேனாமுள்
உன் பெயரை மட்டும் - ஒராயிரமுறை
எழுதினாலும் அலுப்பதில்லை!

செவ்வாய், 16 ஜூன், 2009

உன் நிழல் என் வசம்

என்னுள் முழுமையாக நீதான்
என்பதை எப்படி சொல்லி உனக்கு
புரிய வைப்பது - வேண்டுமென்றால்
உன் நிழலை தேடித்தான் பாரேன்!
நீதான் என் வசமில்லையே தவிர
உன் நிழலும், உள்ளமும்
என்றோ, எப்பொழுதோ
என் வசம்...

உன் இமையாக நான்

உன் மகிழ்ச்சியில்
மேல் இமையாக இருப்பதை காட்டிலும்
உன் அழுகையின்
கீழ் இமையாக இருக்கவே
விரும்புகிறேன்