வெள்ளி, 10 அக்டோபர், 2008

பிரிவு

ஒரு வகையில் நீயும் சுனாமியும்
ஒன்றுதான்
நீ பிரிந்த போது
நம் நினைவுகளை என்னிடம்
விட்டு சென்றதை விட
உன்னுள் எடுத்துக்கொண்டதுதான்
அதிகம்.



வியாழன், 9 அக்டோபர், 2008

ஆன்சைட்

வெள்ளைத் தோள் மங்கைகள் ,
டாலரில் சம்பளம்
starbucksil காபி,
mexican restaurantil பரிட்டோ - என்ற போதும்
அம்மா வைக்கும் ரசத்திற்கும்
அப்பா கலந்து தரும் சாம்பார் சாதத்திற்கும்
ஏங்கியது மனம்.

என் முதல் ஆன்சைட் அனுபவம்


நம்ம எழுதுன உடனே நிறைய பேர் வந்து படிப்பாய்ங்க , நாமளும் கொஞ்சமாவது நண்பர் வட்டம் முடியாட்டி ஒரு சதுரத்தையாவது சேக்கலாம்னு பாத்தா ஒருத்தர் கூடே ம்ம்... வந்து எட்டி கூட பார்க்க மாட்டேன்றாங்க . தினமும் யாரும் நம்மள கண்டுக்க மாட்டேன்றானுங்கன்னு, அந்த சூரியன் தன்னூட வேலைய செய்யாம இருக்கா? இல்லே , யாரும் சோறு கூட வைக்க மாட்டேன்றானுங்கன்னு அந்த காக்காதான் கத்தாம இருக்கா(டேய் கொஞ்சம் அடுங்குடா) . எழுதுவது நம் வேலை (அங்க யாருப்பா "படிச்சிட்டு தலைய பிச்சிகிறது எங்க வேலை" ன்னு சொல்றது) . நம்ம ஆத்ம திருப்திக்கு எழுத வேண்டியதுதான்.சரி அத விடுங்க , நான் முதல்ல பறந்தது பத்தி சொல்றேன். விமானதுலதான் நான் ஒரு சாப்ட்வேர் தொழிலாளி , எங்க டீம் தலைவர் தம்பி நீ அமெரிக்கா போறேன்னு சொன்ன கனத்துலேந்து மனசுக்குள்ள ஏதோ அந்த பில் gates க்கே மருமகனா ஆகா போகிற மாதிரி ஒரு நெனைப்பு. அத விட விமானத்துல பறக்க போறேன்னு நெனைக்கும் போதே ஒரே சிலிர்ப்பு. உங்களுக்குத்தான் தெரியுமே , அமெரிக்கா கிளம்பரோம்னு சொன்ன உடனே வீட்டுல பருப்பு போடிலேந்து அரப்பு புடிவரைக்கும் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டாங்க. இன்னொரு விஷயம் இருக்குங்க , சாப்ட்வேர் மக்களுக்கே உரித்தான பாரம்பரியமான விருந்து கலாச்சாரம், ஏற்கனவே விருந்து கொடுத்தவன் எல்லாரும் பழைய படுத்துல வர்ற பழிவாங்க துடிக்கிற வில்லன் ரேஞ்சுக்கே பாக்குறான். உயிர்த்தோழன் ஒருத்தன் காது பக்கத்துல வந்து " மாட்டுனடி மாப்புள" ன்னு நக்கல் வேற.
இது எல்லாம் முடிஞ்சு, கெளம்புற நெருத்துல அட்வைஸ் பண்றதுக்கே வண்டி வச்சிக்கிட்டு வருவாய்ங்க . இதுல நம்ம தாத்தா , பாட்டி வேற "பேராண்டி திரும்ப வரும்போது வெள்ளக்கார பொண்ண புடிச்சிகிட்டு வந்துடாதேன்னு " ஒரு அட்வைஸ் (" உள்ளுர்லேயே டூ வீலேர் ஓட்ட முடியல , வெளியூர் போயா ராக்கெட் ஓட்ட போறேன்") . இது எல்லாம் முடிஞ்சு கிளம்பற நேருத்துல கண்ணுல தண்ணி கட்டும் , எங்க வாய் விட்டு அழுதா கௌரவம் குறைஞ்சிடும்னு , சும்மா தங்க பதக்கத்துல வர்ற சிவாஜி கணக்கா ஒரு நடிப்பு நடிச்சிட்டு போய் ப்ளான்ல உட்கார்ந்தேன்.
கொஞ்ச நேரத்துல நம்ம சிங்கார சென்னை ஒரு சின்ன புள்ளியா தெரிஞ்சு மறைஞ்சி போச்சு. நல்ல வேலை பக்கத்துல திருச்சிலேந்து ஒரு அண்ணன் பேச கிடைத்தார் . nallaa பேசி நண்பர் ஆயிட்டாரு. அப்புறம்தான் கச்செரியே , விமான பணிப்பெண் ஒருவர் சாப்பாடு கொண்டு வந்து வைத்தார். விமானத்தthula சாப்பிடுவதற்கு ஒரு பெரிய போராட்டம்மே நடத்தன்னும்ங்க . காபி கேட்டா எல்லாம் தனி தனியா கொண்டு கொடுப்பாய்ங்க . காபி தண்ணி தனியா, சக்கரை தனியா, பால் கிரீம் தனியா. நாமெல்லாம் பால் கிரீம் முத தடவை பாக்குறோம். திருவிழாவுல காணாம போன பையன் மாதிரி முழிச்சிக்கிட்டு இருந்தேன். பக்கத்துல இருந்த அண்ணன் தான் ,உதவி செஞ்சாரு. என்ன நடந்ததுன்னு ஒரு சின்ன திரைக்கதை கீழே..

அவரு : டேய் என்னடா முழிச்சிக்கிட்டு இருக்கே

நான்: இல்ல நே , காபி கேட்ட தனி தனியா கொண்டு வந்து கொடுத்துட்டு போய்ட்டா அதான் ஒன்னும் புரியல.

அவரு: (புல் மப்பு) இதுக்குதாண்டா என்ன மாதிரி ஒருத்தரு பக்கத்துல இருக்கனும்ன்னு , சரி முதல கிரீம் பேக்க கிழிச்சு அந்த காபி தண்ணியில ஊத்து.

நான்: சரிண்ணே , ஊத்திட்டேன்

அவரு: சரி , இப்ப தேவையான சக்கரைய அதுல கொட்டு,

ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, இந்தாண்ட பக்கம் உக்காந்துகிட்டு இருக்குற வெள்ளைக்காரன் என்னை ஒரு மாதிரி பாக்குறான்,

கொஞ்ச நேரத்துல என் காபி ஒரு மாதிரி திரிஞ்சி போச்சு... மறுபடியும் அந்த அண்ணன் கிட்ட

நான்: அண்ணன், அண்ணன்

அவரு: என்னடா , எல்லாத்தையும் கலந்த்துட்டீயா ,

நான்: இல்லே ந , காபி ஒரு மாதிரி ஆயிடிச்சி, ன்னு சொன்ன உடன

அவரு: என்னடா பண்ணனு கேட்டாரு.

நான் உடனே இந்த பால் எடுத்து இந்த கப் காபில கலந்தேன்னு சொன்னேன், அவரு உடன "அடப்பாவி எதுக்குடா பால , ஆப்பிள் juice la கலந்தேன்னு சொன்னாரு".

இப்ப புரிஞ்சது ஏன் nammala பாத்து அந்த வெள்ளைக்கார பய சிரிச்சானு .

இது எல்லாம் முடிஞ்சி ஒரு வழியா சிகாகோ , இறங்கி போர்ட் ஒப் என்ட்ரி போட்டு , விமான நிலையத்த விட்டு , வெளியல வந்து நண்பன பார்த்து கட்டி பிடிச்சு , மச்சான் எப்படி டா இருகேன்னு கேட்டா " டேய் முதல்ல என்ன கட்டி பிடிக்காதடா , இங்க அதுக்கு வேற அர்த்தம்ன்னு sollittu என்னோட லக்கேஜ எடுக்க போய்ட்டான் .

கொஞ்சம் தூரம் தள்ளி பார்த்தா , நம்ம ஊரு உலக நாயகன் கமலுக்கே சவால் விடுற மாதிரி ஒருத்தர் , ஒரு பெண்ணோடு கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துகிட்டு இருக்காரு. அடப்பாவிங்கலானு நெனைச்சிக்கிட்டு திரும்பும் போதே ....... speakerlae ஒருத்தர் "Welcome to land of yankees, chicago" ன்னு ஒரு announcement.

விவேக் சொல்லற மாதிரிதான் , இந்தியாவுல வெளியல "Piss" அடிக்கலாம் "kiss" அடிக்க கூடாது , ஆனா இங்க "kiss" க்கூட அடிக்கலாம் ஆனா கண்டிப்பா "piss" மட்டும் அடிக்க கூடாதுன்னு.....