புதன், 18 நவம்பர், 2009

உன் நினைவுகள்

தினமும் என்னை உறங்கவிடாமல்,
சிசு தரித்த கண்ணித்தாயின்
சந்தோஷ வலிகளாய்
உன் நினைவுகள்!

எத்தனை விடியல்கள்

நீ இல்லாத இந்நாட்களில்
என் இரவில் மட்டும்தான்
எத்தனை விடியல்கள்!

புதன், 9 செப்டம்பர், 2009

உன்னிடம்

உன் முன்னே
நிற்கும் போது மட்டும்..
அர்ஜுனன் முன் நின்ற
பீஷ்மராகிரேன் !
ஒவ்வொரு நாளும்
உன்னை ஜெயிக்க நினைத்து ,
ஒவ்வொரு முறையும்
தோற்று போகிறேன் !

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

மார்கெட்டிங்

எல்லாருக்கும் மார்க்கெட்டிங் அனுபவம் இருந்திருக்கும், இங்கே அப்படி என் நண்பர் ஒருவர் மாட்டிக்கொண்ட சம்பவம் கீழே.. நம்ம நண்பர் வீட்டுக்கு பிரபலமான அந்த நிறுவனத்தோட பொருட்களோட ஒருத்தர் வந்து இருக்கார். பின்னே நடந்தவை...

சார் , உங்க வீட்டுல என்ன பேஸ்ட் use பண்றீங்க ,
நண்பர், colgate paste,,,
அதை கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்..
(நம்ம நண்பரும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்கார், கொஞ்சம் எடுத்து தன்னோட கையில் தேய்த்தவர்)
"பாருங்க", உங்க paste use பண்ணி தேய்க்கும் போது "க்ரீச்சு,க்ரீச்சுன்னு" ,"சத்தம் வருது...
chemicals use பண்ணி தயாரிக்க பட்டது சார்", உங்க பல்லு சீக்கிரம் தேய்ந்ஜிடும்ன்னு சொல்லி இருக்கார்,
உடனே அவர் கொண்டுவந்த paste எடுத்து தேய்த்து காட்டி,
"பாருங்க எங்க கம்பெனி பேஸ்ட் எவ்வளவு மென்மையா இருக்குன்னு சொல்லி இருக்கார்...."
அப்பவே நம்ம ஆளு காண்ட ஆயிட்டார்...
உடனே," நாங்க இந்த பேஸ்ட் ரொம்ப நாளா உபயோகிக்கிறோம் நல்ல தான் இருக்குன்னு " சொல்லி இருக்கார்.
உடனே விற்க வந்தவர், "சரி சார், அத விடுங்க..என்ன சாம்பு use பண்றீங்கன்னு கேட்டு இருக்கார்..."
நம்ம ஆளு கடுப்புல, "எல்லாம் க்ளினிக் *****ear தான்னு சொல்லி இருக்கார்..."
இவரு உடனே ...."அதை கொஞ்சம் எடுத்துட்டு வாங்களேன்.."
நம்ம ஆளு மனசுக்குள் "மவனே இருடி உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லனு" திட்டிகிட்டே...கொண்டு வந்து கொடுத்திருக்கார்,
கொஞ்சம் எடுத்து தன்னோட கையில் வைத்து..பின்னர் தண்ணி ஊத்தி கழுவி இருக்கார்..
அதன் பின்னே..தன கையில் torch light அடித்து காட்டி இருக்கார்....
"பாருங்க...blue color தெரியுது" அவ்வளவும் chemicals சார், சீக்கிரம் முடி எல்லாம் கொட்டி போய்டும்".எங்க சாம்பு ரொம்ப மென்மையானது , ஒன்னு வாங்கிகோங்க.இது வெறும் 199 மட்டுமே..ன்னு சொல்லி இருக்கார்..
உடனே..நம்ம ஆளு " நாங்க ஏண்டா தலை குளிச்ச பிறகு..தலையில torch light அடிக்க போறோம்னு கேட்டு இருக்கார்....
(அதுக்கு அப்புறம் ஏன் சாம்பு விற்க வந்தவர் அங்க உக்காந்து இருக்க போறார் விடு ஜூட்)

வியாழன், 30 ஜூலை, 2009

இமையசைவில்

அடியே
உன் இமையசைவில்
புறப்படும் புயல் காற்று,
என் இதய மலர்களை
பிய்த்து எரிவதேன்!

செவ்வாய், 21 ஜூலை, 2009

இதயத்தின் இசை

இதுவரை

வெறும் ஓசையாகவே இருந்த

என் இதய துடிப்பு ,

நீ வந்த பின் -- என்னை

மயக்கும் இசையாகவே இசைக்கிறது..

கண்ணீர்

நீ சொல்லாவிட்டால் என்ன,

உன் விழிகள் சிந்தும் கண்ணீர்

சொல்லுமே..நம் காதலை !

திங்கள், 20 ஜூலை, 2009

என் எழுத்துக்கள்

நீ இங்கு வாசிப்பது எழுத்துக்கள் அல்ல,
என் இதயத் துடிப்புகளை!
நீ வாசிக்க மாட்டாய் என்றவுடன்,
எழுத்துக்களும், இதயமும் ஒன்றுசேர
நின்று போனதே...
கொஞ்சம் வாசித்து விட்டுதான் செல்லேன்,
இதயமும், எழுத்துகளும்
துடித்து விட்டுத்தான் போகட்டுமே..

தனி தீவாய்

பெருங்கண்டமாய் இருந்தவனை..
உன் நினைவலைகளால்
சின்னஞ்சிறு தீவாய்
மாற்றியவள்!

திங்கள், 13 ஜூலை, 2009

எழுத்துக்கள் மூலம் தூது

என்
தனிமையின் சோகங்களை
உன்னிடம் கூற,
தென்றலையோ, வான்மதியையோ
என்னால்
தூது அனுப்ப இயலாது....
இந்த எழுத்துக்களை தவிர!

பேரிடியாய்

உனக்கென்ன
இரண்டு நாட்கள்தானே பேசவில்லை
என்று சொல்லிவிட்டாய்..
எனக்கல்லவா தெரியும்
என் இமைகள் மோதிய சத்தம் கூட
பேரிடியாய் இருந்ததென....

இத்தனையும் செய்துவிட்டு

ஓடியாடிக் கொண்டிருந்தவனை
ஓரிடத்தில் அமரச்
செய்தாய் !
ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவனை
அமைதியாக இருக்கச்
செய்தாய்!
எல்லோரும் சிரிக்கும் போது
என்னை மட்டும் அழச்
செய்தாய்!
இத்தனையும் செய்துவிட்டு - எப்படி
அன்பே
ஒன்றுமே செய்யாததுப் போல்
சிரிக்கிறாய்!

இரத்த அணுக்கள்

என்
உடலெங்கும் பாயும் இரத்த அணுக்கள்,
என்
இதயம் கடக்கும் போது மட்டும்
புன்னகை பூக்கிறதே ,
நீ அங்கு வசிக்கிறாய் என்பதாலா?

வெள்ளி, 10 ஜூலை, 2009

மறுபிறவி

உயிரற்றவைகளாக இருக்கும்
என் எழுத்துக்கள் யாவும்,
நீ வாசித்தவுடன்
மறுபிறவி எடுக்கிறதே....

வியாழன், 9 ஜூலை, 2009

இதய ஓசை

உன் நினைவாய்
இதயத்தோடு அணைத்திருந்த
புத்தகம் தந்தாய்!
சத்தியமாய் சொல்கிறேன்
தினம்தோரம் அதை காதில்
வைத்து கேட்கிறேன்...
உன் இதயத்தின் ஓசை
கேட்கிறதா என்று....

தாயாகிறாய்

நான் பிறந்த போது
பெயர் வைத்து கொஞ்சிய
என் தாயைப்போல்,
என்னை
தினம் ஒரு பெயர் வைத்து
கூப்பிடுவதால் ....
நீயும் ஒரு தாயாகிறாய்!

அன்பை பங்குபோட

உன்னை பெற்ற அண்ணைக்காவது
அவள் அன்பை பங்குபோட
மூன்று பெண் பிள்ளைகள் உண்டு ....
உன் இதயம் பெற்ற எனக்கு
நீ மட்டும்தானடி கண்ணே ...

கலைந்த என் கேசம்

உனக்கென்ன என்
தலைகேசம் கலைத்து சென்றுவிட்டாய்...
கலைந்தது என் கேசம்
மட்டுமா...

கவிப்பேச்சு

நீ பேசும் யாவையும்
கவிதையாக எழுதி விடுகிரேனாம்..
குற்றஞ்சாட்டுகிறாய்!
அடி வானவில்லே
இன்னுமா புரியவில்லை நீ
பேசுவதே கவிதையாக........

உரிமை

நான் எழுதியவைகளை படிப்பதற்கு
உனக்கு உரிமை இல்லைஎன்கிறாய் ...
இது எப்படித்தெரியுமா இருக்கிறது,
இதயத்திடம் மூச்சுக்காற்று சொன்னதாம்
"என்னை பிடித்து வைக்க உனக்கு
உரிமை இல்லையென்று"!

கைரேகை ஓவியம்

நீ கொடுத்த நூலின்
ஓவியம் வரைந்த பக்கங்களை விட,
வரையாத பக்கங்களையே அதிக
நேரம் பார்க்கிறேன்!
உன் கைரேகை வரைந்த ஓவியங்களை
ரசித்தபடி!

செவ்வாய், 7 ஜூலை, 2009

காதலின் ஆழம்

உன் மீது நான்
வைத்திருக்கும் காதலின்
ஆழமானது!
உன் இமைகளை மூடியபின்
ஏற்படும் கருமை நிறத்தின்
அந்தமானது!

திங்கள், 6 ஜூலை, 2009

இமை இதழ்கள்

அதிகாலை
மலரிதழ்கள் விரிவதை காண்பது
அதிசியமாம்!
நான்தான் தினம்தினம் நீ
உறங்கி கண்விழிக்கும் போது
உன் இமை இதழ்களை
காண்கிறேனே!

தலையணை ரேகைகள்

உறங்கியப்பின்னும்
உன்
நினைவாகவே நான் என்பதற்கு ,
என்
தலையணை ஈரரேகைகளே
சாட்சி!

கண்களோரமாய்

தொலைபேசியில்
உன்னோடு பேசி முடித்தவுடன்,
என் கண்களோரம் வழியும்
ஈரம் சொல்லுமே,
என் காதலை உனக்கு!

எல்லாமுமாய் நீ

எங்கெங்கு காணினும்
நீ!
பிறகுதான் தெளிந்தேன்
என் விழிகளாய்
நீ!
பிறகென்ன வியப்பு!

உன் நினைவுகள்

உலர்ந்த உதடுகளை
தன்னையறியாமல்
ஈரப்படுத்தும் நாவாய்
உன் நினைவுகள் !

வசந்தகால முதற்தென்றலே

இலையுதிர் காலம் முடிந்து
வசந்தகாலத்தின் முதற் தென்றலாய்
நீ,
தொட்டு செல்லும் அந்த
கணத்திர்க்காக வருடம் முழுமையும்
காத்திருக்கும் உலர்ந்த மரமாய்
நான்..
தொட்டுதான் செல்லேன்.....

புதன், 1 ஜூலை, 2009

உன் இமைகளின் அரவணைப்பில்

அடுத்த பிறவியலாவது - உன்

விழிகளாக பிறக்க வரம்

வேண்டும்!

உன் இமைகளின் அரவணைப்பில்

ஒருமுறையாவது ஆசைதீர

துயில வேண்டும்!

செவ்வாய், 30 ஜூன், 2009

என்ன தலைப்பு சூட்ட

உன்னை

பிரிந்து இருக்கும்

இந்நாட்களில் ஏனோ வார்த்தைகள்.....

அடி ஓவியா

உன் ஓவியம் கேட்டதற்கு ,
நீ
வரைந்த ஓவியங்கள் தந்தாய்!
அடி ஓவியமே...
சொன்னால் நம்புவாயா
நீ
வரைந்த ஓவியங்களில்
உன்னை மட்டுமே பார்க்க முடிகிறது !


இமைகள் எழுதும் கவிதை

உன்
இருஇமைகள் எழுதும்
கவிதைக்கு முன்னால்
நான்
எழுதும் யாவும்
எம்மாத்திரம்!

ஆசைதான்

உன் இதயத்துள் சென்று,
உன்னுள் நிறைந்தவன்
நானா என்று கண்டறிய,
ஒருமுறையேனும்
உன் சுவாசக்காற்றாய் மாற
ஆசைதான்..
நடக்குமா அன்பே..

வியாழன், 25 ஜூன், 2009

வேறுபாடு

உன்னை பார்த்த போது -
நீ இவளை மணந்தால்
வாழ்க்கை இனிமை என்றது அறிவு!
இல்லையில்லை இவள்தான்
உன் வாழ்க்கை என்றது மனது !
புரிந்ததா வேறுபாடு!

கோபப்படும் தருணங்களில்

தருணங்களில்
கண்கள் அகல விரித்து,
ஆட்காட்டி விரல் உயர்த்தி,
உதடுகள் சுழித்து, மிரட்டும்
அழகிற்காக - எத்தனை தடவையேனும்
உன்னை கோபப்படுத்துவேன்!
மண்ணிப்பாயாடி பெண்ணே!

செவ்வாய், 23 ஜூன், 2009

அழகென்பேன்

நீ பேசும் அழகை விட
பேசும்போது அபிநயம் பிடிக்கும்
உன் கண்கள்தான் அழகென்பேன்!

திங்கள், 22 ஜூன், 2009

காத்திருக்கும் நேரங்களில்

உனக்காக காத்திருக்கும்
நேரங்களில் - நான் மட்டுமல்ல
என் கடிகார முட்களும்
ஆனந்தம் அடையுதடி!
தூரத்தில்
நீ பாதம் தொட்டு
நடந்து வரும் ஒவ்வொரு அடிக்கும்
என் இதயம்
ஈரம் பட்டு போகுதுடி!

வியாழன், 18 ஜூன், 2009

உன் இதயம் என்னிடத்தில்

என் இதய துடிப்பு மட்டும்
இரு மடங்காக இருக்கிறதாம்!
சொன்னால் பைத்தியம் என்பார்கள்,
உன் இதயமும் சேர்ந்து துடிப்பது
என்னிடதில்தானே!

விழிகள் எனும் ஆயுதம் தாங்கி

சத்தமில்லாமல்
அணு ஆயுத சோதனை நடத்தும்
உன் இருவிழிகளை - என்னதான்
சொல்லி தடுப்பது!
இப்போதாவது என் இதயம்
சீராக துடிக்க,
உன் கருவிழிகளை கொஞ்சமேனும்
உருட்டாமல்த்தான் இரேன்!

காத்திருப்பேன்

உன் பிஞ்சு விரல்கள் - என்
தலை கேசம் தொட்டு
விளையாடும் அந்த கணத்திற்காக
எத்தனை காலமேனும்
காத்திருப்பேன்

அழகாய் தானடி இருக்கும்

நான் எழுதும் யாவும்
அழகாயிருக்கிறது என்கிறாய்..
அடி அழகியே - உன்னை நினைத்து
உன்னையே
எழுதினால் யாவும் அழகாய் தானடி
இருக்கும்!

புதன், 17 ஜூன், 2009

பேனா முள்ளின் சிநேகம்

ஒரு வரி எழுதவே தடுமாறும்
என் பேனாமுள்
உன் பெயரை மட்டும் - ஒராயிரமுறை
எழுதினாலும் அலுப்பதில்லை!

செவ்வாய், 16 ஜூன், 2009

உன் நிழல் என் வசம்

என்னுள் முழுமையாக நீதான்
என்பதை எப்படி சொல்லி உனக்கு
புரிய வைப்பது - வேண்டுமென்றால்
உன் நிழலை தேடித்தான் பாரேன்!
நீதான் என் வசமில்லையே தவிர
உன் நிழலும், உள்ளமும்
என்றோ, எப்பொழுதோ
என் வசம்...

உன் இமையாக நான்

உன் மகிழ்ச்சியில்
மேல் இமையாக இருப்பதை காட்டிலும்
உன் அழுகையின்
கீழ் இமையாக இருக்கவே
விரும்புகிறேன்

செவ்வாய், 26 மே, 2009

மின்னல் என்ற புன்னகையால்

மின்னல் இடியுடன் கூடிய மழை பொழியுமாம் இன்று
தொலைகாட்சியில் ஒளிபரப்புகிறார்கள்
எனக்குத்தான் முன்னமே தெரியுமே..
இன்று நீ என்னை பார்த்து முதன்முதலாய்
புன்னகைத்த போதே!

வாழ்க்கையடி நீ எனக்கு

காதலினால்
உன்னையே சுற்றி வருவதால் - வாழ்க்கையில்
முன்னேற மாட்டேனாம் நான் .,
அவர்களக்கு எப்படித் தெரியும் - என்
வாழ்க்கையே நீதான் என்று

திங்கள், 25 மே, 2009

காதலும் மழையும்

உனக்கு மழையில் நனைய பிடிக்கும் என்றாய்
நனைந்துதான் பாரேன் என்றேன்
"வேண்டாம்பா நனைந்தால் ஜுரம் வரும்" என்றாய் மழலைக் குரலில்
ஏனோ எனக்கு --
நீ ஏற்க மறுத்த என் காதல்தான் நினைவுக்கு வந்தது