உனக்காக காத்திருக்கும் நேரங்களில் - நான் மட்டுமல்ல என் கடிகார முட்களும் ஆனந்தம் அடையுதடி! தூரத்தில் நீபாதம்தொட்டு நடந்துவரும்ஒவ்வொருஅடிக்கும் என்இதயம் ஈரம்பட்டுபோகுதுடி!
சத்தமில்லாமல் அணு ஆயுத சோதனை நடத்தும் உன் இருவிழிகளை - என்னதான் சொல்லி தடுப்பது! இப்போதாவதுஎன்இதயம் சீராகதுடிக்க, உன்கருவிழிகளைகொஞ்சமேனும் உருட்டாமல்த்தான்இரேன்!
என்னுள் முழுமையாக நீதான் என்பதை எப்படி சொல்லி உனக்கு புரிய வைப்பது - வேண்டுமென்றால் உன் நிழலை தேடித்தான் பாரேன்! நீதான் என் வசமில்லையே தவிர உன் நிழலும், உள்ளமும் என்றோ, எப்பொழுதோ என் வசம்...